அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது நிரூபணம்

நாடாளுமன்றில் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான தேர்தலில் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் பதவியை பெறுவதற்கு ரஞ்சித் சியம்பலாபிட்டிய 148 வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும், வாக்களித்த 40 சுயேச்சை உறுப்பினர்கள் குழு நீக்கப்படும் போது அரசாங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 108 ஆக குறையும் எனவும் அவர் தெரிவித்தார்.

டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட மூவரும், சுயேட்சையாக உள்ளதாக தெரிவித்த அரசாங்கத்தின் பத்து பேரும் இணைந்தால் அரசாங்கத்தின் பலம் 95 ஆசனங்களாக குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயத்தில் எதிர்க்கட்சிகள் உரிய முறையில் செயற்பட்டிருந்தால் அரசாங்கத்திற்கு எதிராக 121 வாக்குகளைப் பெற்றிருக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

 

IBC Tamil