நாடு தழுவிய ரீதியில் இன்று முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்த முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்படுவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.
அத்துடன், நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் டீசலுக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், நாளைய தினம் முதல் எதிர்வரும் 12ம் திகதி வரை தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் பல வங்கித் தொழிற்சங்கங்களும் இன்றைய போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளன.
தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல பொது மற்றும் தனியார் வங்கிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக பல தனியார் வங்கிகளும் அதன் சேவைகளை கட்டுப்படுத்தும் முடிவை அறிவித்துள்ளன.
Tamilwin