நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு அவசரமாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினால், அதன் பின்னர் நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போதை நாடாளுமன்றத்தை உடனடியாக கலைக்க வேண்டுமாயின், நாடாளுமன்றத்திற்கு அதற்கான யோசனை ஒன்றை நிறைவேற்றுவதே ஒரே வழி.
மூன்று வருடங்களின் பின்னரே ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் கிடைக்கும்.
இதனால், நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து, நிறைவேற்றிய பின்னர், உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துவது சம்பந்தமாக ஆராயப்படடு வருவதாக தெரியவருகிறது.
ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் 11 கட்சிகளுடனான சந்திப்பில், நாடாளுமன்றத்தை கலைத்து அவசரமான தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் தெரிவித்திருந்தார்.
Tamilwin