இலங்கையை விட்டு வெளியேறிய ஒரு இலட்சம் பேர்

இந்த வருடத்தில் இதுவரையில் 100,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைக்காக இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளதோடு, எதிர்வரும் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் வளர்ச்சியடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் செயலாளர் எம்.எப்.எம்.அர்ஷாத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் 2021 வருடாந்த றிக்கையின் பிரகாரம், கடந்த வருடம் வேலைக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 121,795 ஆகும். இது முந்தைய ஆண்டை விட 127 சதவீதம் அதிகமாகும்.

அத்துடன், இவ்வருடம் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 300,000ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Tamilwin