முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு பயணத் தடை விதிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அலரிமாளிகை எதிரில் மற்றும் காலி முகத்திடல் மைதானத்தில் அகிம்சை வழிப் போராட்டக்காரர்கள் மீது கும்பல் தாக்குதலைத் தூண்டியவர்களுக்கு எதிராக இவ்வாறு பயணத்தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அலரிமாளிகையில் இருந்து வன்முறைக் கும்பலைக் கட்டவிழ்த்துவிடத் தூண்டிவிட்டு, சதி செய்த அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) கூறியுள்ளது.
அரசாங்கத்தில் அல்லது அவர்களது குடும்பத் தொடர்புகளில் வகித்த பதவிகளைப் பொருட்படுத்தாமல் மற்றும் உடனடி பயணத் தடைகளுக்காக அத்தகைய நபர்களுக்கு எதிராக காவல்துறையால் பெறப்படும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அலரிமாளிகையில் இருந்து கட்டவிழ்த்து விடப்பட்ட கும்பல் வன்முறையைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் தவறியமை குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச் செல்வதைத் தடுக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க மீண்டும் வலியுறுத்தினார். அதேவேளை, அரச புலனாய்வுப் பிரிவினர் மோதலை இடைமறிக்கத் தவறியது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.
Tamilwin