ஜனாதிபதி பதவி விலகினால் மட்டுமே சஜித் பிரதமர் பதவியை வகிப்பார்: கிரியெல்ல

ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை வகிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், அதன் பின்னர் சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்கத் தயார் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

“இந்த ஜனாதிபதி உள்நாட்டில் அல்லது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை,” என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்க முடியாத ஜனாதிபதி ஒருவரின் இருப்பை மக்கள் கேள்விக்குள்ளாக்குகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Tamilwin