மலேசியா- அமெரிக்கா கட்டாய தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு என்ன?

அமெரிக்கா தனது சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை மூலம் மலேசிய அரசாங்கத்துடன் இணைந்து ஒருபணிக்குழுவை நிறுவுவதன் மூலம் கட்டாயத் தொழிலாளர் பிரச்சினைக்குத் தீர்வு காண ஒப்புக்கொண்டுள்ளதாக மனிதவள அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்தார்.

கட்டாயத் தொழிலாளர்களை எதிர்த்துப் போராடுவதற்கான நாட்டின் முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் கொள்கைகளை உருவாக்குவது உள்ளிட்ட தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில் கவனம் செலுத்தும் குழு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையும் இம்மாத இறுதியில் மலேசியாவிற்கு பணிப் பயணம் மேற்கொண்டு  தொழில்துறை தொழிளார்களுடன் ஒரு பட்டறையை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

“இந்த பயிலரங்கு கட்டாய உழைப்பின் கூறுகள் தொடர்பான விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும், இதனால் தொழில்துறை தொழிளாலர்கள் தங்கள் தயாரிப்புகள் அமெரிக்க சந்தையில் நுழைவதைத் தடை செய்ய முடியாது,” என்று தற்போது வாஷிங்டனுக்கு பணிப் பயணத்தில் இருக்கும் சரவணன் கூறினார்.

கட்டாய உழைப்பைக் கட்டுப்படுத்துவதில் இருதரப்பு ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளை இந்த பணிப் பயணம் ஏற்படுத்தியுள்ளது என்றும், கட்டாய உழைப்பு மற்றும் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைகளைக் கையாள்வதில் மலேசியா எதிர்கொள்ளும் சவால்களை நன்கு புரிந்து கொள்ள அமெரிக்காவிற்கு ஒரு தளமாக இருப்பதாகவும் சரவணன் கூறினார்.

“மலேசிய அரசாங்கத்தின் முயற்சிகளை அமெரிக்கா மனமார பாராட்டுகிறது, மேலும் கட்டாய உழைப்பை எதிர்த்துப் போராடுவதில் அதன் மூலோபாய ஒத்துழைப்பைத் தொடர தயாராக உள்ளது,” என்று அவர் கூறினார்.

பகிரப்பட்ட முன்முயற்சிகள்

சரவணனின் கூற்றுப்படி, அவர் அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையின் நிர்வாக உதவி ஆணையர் யென்மேரி ஹைஸ்மித்(AnnMarie Highsmith) மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான அமெரிக்க தொழிலாளர் துறை துணைச் செயலர் தியா லீ (Thea Lee) ஆகியோரைச் சந்தித்தார்.

முதலாளிகள் அடையாள ஆவணங்களை வைத்திருத்தல், அதிகப்படியான கூடுதல் நேரம் மற்றும் ஊதியங்களை நிறுத்தி வைத்தல் போன்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation) பட்டியலிட்டுள்ள கிட்டத்தட்ட அனைத்து கட்டாய தொழிலாளர் குறிகாட்டிகளையும் நிவர்த்தி செய்வதில் மனிதவள அமைச்சகத்தின் முன்முயற்சிகளை தான் பகிர்ந்து கொண்டதாக அவர் கூறினார்.

அமெரிக்க தொழிலாளர் துறையுடன் ஒத்துழைப்பது குறித்து சரவணன் கூறுகையில், தொழில்நுட்ப பரிமாற்றம், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி திட்டங்களில் அதன் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள துறை ஒப்புக்கொண்டுள்ளது.

தொழிற்சங்கங்களின் முக்கியத்துவம் குறித்து மலேசியா தொழிலாளர்களுக்கு வெளிப்பாட்டை வழங்க வேண்டும் என்றும் அந்தத் துறை பரிந்துரைத்துள்ளது என்றும் கூறிய அவர், இது ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் தொழிற்சங்கங்கள் சட்டம் 1959ன் திருத்தங்களுடன் ஒத்துப்போகிறது என்றும் கூறினார்.