பங்களாதேஷையும் விட்டுவைக்காத இலங்கையின் அரசியல் நெருக்கடி!

இலங்கையில் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் 2,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால், பங்களாதேஷின் ஆடைத்தொழில் துறைக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் சரக்குகள் தேங்கிக் கிடப்பதால், பங்களாதேஷில் உள்ள ஆடைத் துறை தற்போது எதிர்பாராத பாதிப்பைச் சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அங்கிருந்து கிடைக்கும் தகவல்களின்படி, ஏற்றுமதி பொருட்களை ஏற்றிச் செல்லும் 10 க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன.

பங்களாதேஷின் 40 சதவீத ஆடை ஏற்றுமதிகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய துறைமுகங்களை அடைவதற்கான முக்கிய இடமாற்ற மையமாக கொழும்பு துறைமுகத்தைப் பயன்படுத்துகின்றன.

இதன் காரணமாகவே பங்களாதேஷின் ஆடைத்தொழில் துறைக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கொழும்பு துறைமுகத்தை தவிர்த்து வட அமெரிக்க துறைமுகங்களை அடைவதற்கு மாற்று வழிகளை பயன்படுத்துவது குறித்து பங்களாதேஷ் அதிகாரிகள் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

 

 

Tamilwin