இந்த ஆண்டு வெசாக் கொடி மற்றும் வெசாக் அலங்காரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெசாக் கொடி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு கோவிட் 19 தொற்று பரவிய போதிலும் வெசாக் கொடிகள் மற்றும் அலங்காரப் பொருட்களுக்கு அதிக கிராக்கி இருந்ததாகவும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெசாக் கொடிகள் மற்றும் அலங்காரங்கள் மற்றும் மெழுகுவர்த்திகளின் அதிக விலையால் தங்களது வியாபார நடவடிக்கைகள் தடைபட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வெசாக் தயாரிக்க பயன்படும் வண்ண காகிதம் உள்ளிட்ட பல மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் வெசாக் கூடுகள் ரூ.250 முதல் ரூ.350 வரை விற்பனை செய்ய வேண்டியுள்ளதாக வெசாக் கூடு விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், சிறிய மெழுகுவர்த்தி ரூ.20க்கும், பெரிய மெழுகுவர்த்தி ரூ.75க்கும் விற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Tamilwin