இன்னும் ஒரு வாரத்தில் நிலைமை மோசமடையும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தற்போது சந்தையில் மரக்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை   பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மேனிங் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்னும் ஒரு வாரத்தில் நிலைமை மோசமாகும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போதைய மரக்கறி விலைகள் சுமார் 35 முதல் 40 சதவீதம் வரை உயரும் என்றும் அதன் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

நாட்டில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் காய்கறி வரத்து குறைவடைந்தமையும் விலையேற்றத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக, அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல சேவைக் கட்டணங்களும் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் கடும் இக்கட்டான நிலையை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Tamilwin