ஒரு நாளைக்கு தேவையான பெட்ரோல் மாத்திரமே கையிருப்பில்! வெளியாகிய தகவல்

ஒரு நாளைக்கு தேவையான பெட்ரோல் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது, ​​92 ஒக்டேன் பெற்றோல் லீற்றருக்கு SLR 84.38, 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றருக்கு 71.19, டீசல் லீற்றருக்கு 131.55, சுப்பர் டீசல் லீற்றருக்கு 136.31 மற்றும் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 294.50 நட்டத்தை அரசாங்கம் ஏற்படுத்துகிறது. இந்த இழப்பை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் இனி தாங்க முடியாது. இது ஒரு தீவிர பிரச்சனை எனவும் குறிப்பிட்டார் .

எரிவாயு கப்பலுக்கு செலுத்த வேண்டிய 5 மில்லியன் டொலர்களை கூட நிதியமைச்சினால் திரட்டிக் கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிவாயு சிலிண்டர் கொள்வனவுக்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை விரைவாக திரட்டிக் கொள்ள வேண்டும். எரிவாயு பற்றாக்குறைக்கு நாளை முதல் ஒப்பீட்டளவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.

 

 

IBC Tamil