காலி முகத்திடல் கலவரம்! – நாடாளுமன்ற உறுப்பினர் இருவர் திடீர் கைது!!

இரண்டாம் இணைப்பு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான மிலன் ஜயதிலக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகவே இவர் செய்யப்பட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு 

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றவியல் விசாரணை திணைக்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி காலிமுகத் திடல் போராட்டகாரர்கள் மற்றும் அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைவாக சனத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, அலரி மாளிகையில் கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டத்தில் கலந்துக்கொண்ட பின்னர் அலரி மாளிகை மற்றும் காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடத்திய வன்முறையாளர்களுடன் சனத் நிஷாந்த காணப்படும் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி இருந்தன.

aசனத் நிஷாந்த வன்முறையாளர்களை வழி நடத்தியதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

சனத் நிஷாந்த, மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது..

 

 

 

IBC Tamil