பதவிப்பிரமாணத்தின்போது கோட்டா கோ ஹோம் என்று சொன்னீர்களா…! ஹரினிடம் கேள்வி

அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்த போது கோட்டாபய ராஜபக்சவிடம், “நீங்கள் கோட்டா கோ ஹோம்” என்று சொன்னீர்களா? என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவிடம் ஞாயிறு ஆங்கில இதழ் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.

ஞாயிறு இதழின் அரசியல் நகைச்சுவை பத்தியில் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தாம் சத்திய பிரமாணத்தின்போது, கோட்டாபயவை பார்க்கவில்லை என்று நீங்கள் கூறியிருந்தாலும், காணொளிகள், நீங்கள் சிரித்து பேசியதை காட்டிதே என்று அந்த பத்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது நீங்கள் ரணில் பாபாவும் 20 திருடர்களும் நாடகத்தில் நடிக்கிறீர்கள். நீங்கள், அமைச்சரவைக் கூட்டத்தி்ல் பங்கேற்கும் போது, உங்களை சுற்றி பாருங்கள்.

வலதுபுறத்தில் வயதான நிமாலை பார்க்கலாம். ஒருவேளை அவர் தூங்கிக்கொண்டிருப்பார்.

உங்கள் இடதுபுறத்தில் தேர்தல்களில் கொடுக்கல் வாங்கல்களுக்கு பிரபலமான டிரானை பார்க்கமுடியும். டீல் விஜேயும் இருக்கக்கூடும்.

பிரதமரான பச்சை மனிதர், எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பதை கடந்த வாரம் பார்க்கமுடிந்தது. பெண் ஒருவர் துணை சபாநாயகராக வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

எனினும் பசிலின் மொட்டு அதனை தோற்கடித்தது. அத்துடன் கோட்டா மாமாவை கண்டிக்கும் யோசனைக்கும் பச்சை மனிதர் எதிராக வாக்களித்தார்.

எனவே உங்களுடைய கோரிக்கைகளான, தேசத்தை கொள்ளையடித்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும், லசந்தவின் கொலையாளிகளை கண்டுபிடிக்கவேண்டும், ரஞ்சனின் விடுதலை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்படவேண்டும் என்பவற்றுக்கு தீர்வுகளை ரணிலால் பெற்றுக்கொடுக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

அதற்கான உத்தரவாதம் உங்களுக்கு கிடைத்துள்ளதா? மனுஷவைப் பற்றி நாங்கள் ஆச்சரியப்படவில்லை. அவர் எஸ்.பி.யின் இளைய பதிப்பு, ஒரு முகாமில் இருந்து மற்றொரு முகாமுக்குத் தகுந்த நேரத்தில் கடந்து சென்று, எஜமானரை மகிழ்விக்கத் தேவையானதைச் சொல்லி, அமைச்சரவைப் பதவியை பெற முயற்சித்தமை அதிர்ச்சியளிக்கவில்லை. உங்களின் முடிவு ஏமாற்றமளிக்கிறது.

ஏனென்றால் கடந்த காலத்தில் இருந்த கண்ணியமான அரசியல்வாதிகளில் ஒருவராக நீங்கள் இருந்தீர்கள். கோட்டா மாமாவை நீங்கள் ‘நந்தசேனா’ என்று அழைத்தபோது அதற்கு அவர் பதிலளித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

கடந்த காலத்தில் தம்மைத் தாக்கிய வேலுப்பிள்ளை போன்றவர்கள் “நாய் போல் சாகடித்ததாகவும்”, தான், மீண்டும் தனது பாதுகாப்புச் செயலாளர் முறைக்கு செல்ல முடியும் என்றும் அவர் கூறினார்.

இதனையடுத்து, நீங்கள் உங்கள் உயிருக்கு ஆபத்து என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நீங்கள் கோட்டா கோ ஹோம் என்று உச்சரித்தீர்கள். சேர் பெய்ல்ட் என்று கூறினீர்கள்.

இவ்வளவு வரலாறு உங்களுக்குப் பின்னால் இருக்கும் நிலையில், நீங்கள் ஏன் கோட்டா மாமா தலைமையிலான அமைச்சரவையில் சேரத் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது.

கோட்டா மாமா தனது பதவியை ராஜினாமா செய்வதற்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும் கால அவகாசம் வழங்கினால் அமைச்சரவையை அமைக்க இளைஞர் சஜித் தயாராக இருந்தார். எனினும் கோட்டாபய செய்யவில்லை.

எனவே சஜித் அரசாங்கத்தை அமைக்க மறுத்துவிட்டார். இதனையே கட்சியில் உள்ளவர்களும் கூறுகின்றனர். என்று ஞாயிறு செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

Tamilwin