இலங்கை வங்கி,மக்கள் வங்கியை விற்பனை செய்ய முயற்சி -வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கை வங்கி,மக்கள் வங்கியை விற்பனை செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார்.

அந்த வளங்களை விற்பனை செய்வதன் மூலம் நாட்டுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

டொலர்களை ஈட்ட அரசாங்கம் திட்டம்

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் பங்குகளை விற்பனை செய்து டொலர்களை ஈட்ட அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜனதா விமுக்தி பெரமுனவின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

 

IBC Tamil