நாடு எரிமலையின் உச்சியில்! பொது நிர்வாக அமைச்சக செயலாளரின் எச்சரிக்கை

தமது பிரதேசங்களிலுள்ள விவசாயிகளுக்கு விளைச்சல்மிக்க அரச காணிகளை வழங்குமாறு அரச அதிகாரிகளிடம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொள்கிறது. அத்துடன் நாடு இன்று எரிமலையின் உச்சியில் இருப்பதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விவசாய நடவடிக்கை

இந்த தருணத்தில் ஒவ்வொரு கோவிலிலும், ஒவ்வொரு விஹாரையும், ஒவ்வொரு தேவாலயத்திலும் சமயச் செயற்பாடுகளை நிறுத்தி விவசாயப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு பாடசாலையும், ஒவ்வொரு ஆசிரியர் சங்கமும், ஒவ்வொரு அரசு நிறுவனமும் பயிர்ச்செய்கையில் ஈடுபடவேண்டும்.

அரச பணியாளர்கள் சலுகைகளை எதிர்பார்க்கக்கூடாது

இதேவேளை, நிறைவேற்று அதிகாரி முதல் பிரதேச சபை உறுப்பினர் வரை மற்றும் அமைச்சின் செயலாளர் முதல் கீழ்மட்ட அதிகாரி வரை அனைவரும் 10 வருடங்கள் சலுகைகளைப் பெறுவதை ஒத்திவைக்க வேண்டும் என்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய நெருக்கடிக்கு அரச அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பொறுப்பு என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

 

Malaimalar