கொழும்பு செப்டெம்பர் மாதத்திற்குள் பஞ்சத்திற்குள்ளாகும்!! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் கொழும்பு நகரில் உணவு இல்லாமல் பஞ்சம் ஏற்படும் என கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க எச்சரித்துள்ளார்.

இதன் காரனாகாம கொழும்பு மாநகர சபையின் 600 ஏக்கர் நிலத்தில் அத்தியாவசிய உணவுப் பயிர்களை பயிரிடும் பணியை கொழும்பு மாநகர சபை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெருவித்துள்ளார்.

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

“நான் யாரையும் பயமுறுத்த விரும்பவில்லை, ஆனால் வரவிருக்கும் நெருக்கடியை மக்களுக்கு தெரிவிக்கவும் தயார்படுத்தவும் மட்டுமே விரும்புகிறேன்.

குறைந்த வருமானம் பெறும் கொழும்பு நகர சனத்தொகையில் சுமார் 60 வீதமானவர்கள் உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்படுவார்கள்.

நகரவாசிகளின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உலக உணவுத் திட்டம், உலகளாவிய உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் பிற நன்கொடை முகவர்களுடன் நாங்கள் தற்போது உரையாடலை மேற்கொண்டு வருகிறோம்.

உணவு விரயம் 

மேலும், நகரில் நடைபெறும் உணவு விரயம் குறித்தும் கவனம் செலுத்தப்படும். கொழும்பு நகரில் நாளாந்தம் 350 மெட்ரிக் தொன் உணவு வீணடிக்கப்படுகிறது. நகரின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவும் வகையில் இதை குறைக்க விரும்புகிறோம்”, எனக் குறிப்பிட்டார்.

 

 

IBC Tamil