பேராபத்து தொடர்பில் 2020இல் எச்சரித்தேன்: எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

இன்று நாடு வீழ்ச்சியடைந்து கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த அழிவு ஏற்படும் என தான் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்தே நாட்டுக்கு வெளிப்படுத்தியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

சுதேச மற்றும் பாரம்பரிய வைத்தியர்களின் குழுவொன்று எதிர்க்கட்சித் தலைவரை நேற்றுக் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துத் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடியிருந்தது.

இதன்போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

வரிச்சலுகை

மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே குபேரர்களுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.

இவ்வாறு வரிச்சலுகை பெற்ற செல்வந்தர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அது தொடர்பாக அதிசயமாகப் பேசினர்.

சுதேச மருத்துவம்

சுதேச மருத்துவமும் பாரம்பரிய மருத்துவமும் காலம் காலமாக நம் நாட்டில் மதிப்புமிக்க தொழிலாக இருந்து வருகின்றது.

இன்று உண்மை வென்று வருகின்றது. உண்மையை வென்றெடுப்பதற்கு மக்கள் கஷ்டப்பட வேண்டியுள்ளமை துரதிஷ்டவசமானது என குறிப்பிட்டுள்ளார்.

 

 

Tamilwin