அமைச்சரவை ஒப்புதலுக்காக! 21வது திருத்தமும், மின்சார கட்டணத் திருத்தமும்!

வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெறும்போது, முக்கியமான 21வது திருத்த வரைவும் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த வரைவை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான சட்டமூலம் இன்று அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 21ஆவது திருத்தச் சட்டமூலத்தில் கட்சித் தலைவர்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் உள்ளடக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, இது தொடர்பான திருத்தம் இன்று அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படவுள்ளது.

மேலும், மின்சாரக் கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவும் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, அரசுக்கு சொந்தமான காணிகளை பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக கையளிப்பதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு இன்று முதல் அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

இருப்பு நீர் ஆதாரங்கள் மற்றும் தொல்பொருள் வகைப்பாடுகளுக்குச் சொந்தமில்லாத நிலங்கள் பயிர்ச்செய்கைக்கு வழங்கப்படும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலங்களை ஒரு வருட காலத்திற்கு பயிர்ச்செய்கைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் காணிகள் காணி ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக மாவட்டச் செயலர்களுக்கு வழங்கப்படுவதுடன், மாவட்டச் செயலாளர்கள் ஊடாக விவசாயம் செய்ய விரும்புவோருக்கு இவை வழங்கப்படவுள்ளன.

Tamilwin