நாட்டின் பல பிரதேசங்களில் கடந்த மூன்று மாத காலத்தில் எரிவாயு, டீசல், பெற்றோல் மற்றும் மண் எண்ணெயை கோரி 3 ஆயிரத்து 516 ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு கோரியே அதிகளவிலான ஆர்ப்பாட்டங்கள்
கடந்த மார்ச் மாதம் 7 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரையான மூன்று மாதங்களில் சமையல் எரிவாயுவை கோரியே அதிகளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
சமையல் எரிவாயு கோரி ஆயிரத்து 185 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பெற்றோலை கோரி ஆயிரத்து 173 ஆர்ப்பாட்டங்களும், டீசலை கோரி ஆயிரத்து 5 ஆர்ப்பாட்டங்களும், மண் எண்ணெயை கோரி 153 ஆர்ப்பாட்டங்களும் இந்த காலப் பகுதியில் நடத்தப்பட்டுள்ளன.
ஒரு வாரத்தில் மாத்திரம் 1111 ஆர்ப்பாட்டங்கள்
மே மாதம் 2 ஆம் திகதி முதல் மே மாதம் 8 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்திலேயே இவற்றில் அதிகளவான ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
அந்த வாரத்தில் நாடு முழுவதும் ஆயிரத்து 111 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilwin