இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைக் கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் உட்பட மேலும் மூவரால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், திறைசேரியின் முன்னாள் செயலாளர் S.R ஆட்டிகல மற்றும் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் உட்பட 13 பிரதிவாதிகள் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
உயர்மட்டங்களில் தீர்மானம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் போது முறையான பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இன்மையே இன்று இலங்கையின் அவல நிலைக்குக் காரணம் என்பதனை கருத்திற் கொண்டு இம்மனுவானது நாட்டு மக்களின் பொது நலனின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டது என தெரிவிப்படுகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்துள்ள பல காரணிகள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilwin