பல பிரச்சினைகளுக்கு பிரதமரால் தீர்வுகளை வழங்க முடிந்துள்ளது – வஜிர அபேவர்தன

நாட்டில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் தீர்வுகளை வழங்க முடிந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் உரப் பிரச்சினை இதுவரை வெற்றிகரமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ஆகையினால், பதற்றமடையாமல் பொறுமையாக இருந்தால், எஞ்சியுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்றார்.

பொறுமை காக்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறவும், நாட்டின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டை உறுதி செய்யவும் பிரதமர் திட்டங்களை வகுத்துள்ளதாகவும், அத்தகைய பணி வெற்றி பெறும் வரை பொறுமை காக்குமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

தற்போது பிரதமரின் திட்டத்திற்கு அரசியல் கட்சிகளும், மக்களும் ஆதரவளிக்க வேண்டும் என்றும், பதற்றமடையாமல் பொறுமை காக்குமாறும் விரைவில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் கூறினார்.

காலியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

Tamilwin