மீண்டும் சூடு பிடிக்கும் போராட்டக்களம்! பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பு

கோட்டா கோ கம போராட்டக்களம் ஏராளமான பொதுமக்களின் பங்கேற்புடன் இன்று மீண்டும் சூடுபிடித்துள்ளது.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தின் பின்னர் போராட்டக்களத்தில் பொதுமக்களின் பங்கேற்பு நாளுக்கு நாள் குறைந்து வந்தது.

கடந்த சில நாட்களாக ஓரிரு போராட்டக்காரர்கள் மட்டுமே கோட்டா கோ கம மற்றும் நோ டீல் கம போராட்டக்களங்களில் கலந்து கொண்டு அரசாங்கத்துக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

அலரி மாளிகை தொடக்கம் கோட்டா கோ கம போரட்டக்களம் வரை ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் இன்று மாலை அலரி மாளிகை தொடக்கம் கோட்டா கோ கம போரட்டக்களம் வரை பொதுமக்களின் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்றது.

அத்துடன் கோட்டா கோ கமவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

 

Tamilwin