கச்சத்தீவு பொருளாதார மீட்பு வலயமாக செயற்பட வேண்டும்: சி.யமுனாநந்தா

எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை இலகுவாகப் பெற இலங்கை அரசின் சட்டத்தின் கீழும் இந்திய அரசின் சட்டத்தின் கீழும் கச்சத்தீவு புனிதப் பிரதேசத்தை பொருளாதார மீட்பு வலயமாக செயற்படுத்தினால் எமக்கு ஏற்படுகின்ற பொருளாதார அழிவில் இருந்து மீளலாம் என யாழ். போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளரும் மருத்துவருமான சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

பொருளாதாரப் பேரிடர் மீட்பு வலயம் அமைத்தல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு பொருளாதார மீட்பு வலயம்

இலங்கையின் பொருளாதாரப் பேரிடர் ஓர் யுத்தமில்லாத யுத்தமாகும். அதாவது ஒருங்கிய சமர்க்களம் ( Hybrid war)ஆகும். கடந்த 2 மாதங்களுக்கு மேல் இந் நெருக்கடி தொடர்கின்றது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சகல சேவைகளும் முடங்கும் நிலைக்கு வந்து விட்டன. கோவிட்த் தொற்றின் போது முழுமையாக இயங்கிய வைத்தியசேவைகள் தற்போது ஸ்தம்பிதம் அடையும் நிலையில் உள்ளன.

இலங்கையின் வடபகுதிக்கு எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை இலகுவாகப் பெற இலங்கை அரசின் சட்டத்தின் கீழும் இந்திய அரசின் சட்டத்தின் கீழும் கச்சத்தீவு புனிதப் பிரதேசத்தை பொருளாதார மீட்பு வலயமாக செயற்படுத்தினால் எமக்கு ஏற்படுகின்ற பொருளாதார அழிவில் இருந்து மீளலாம்.

இது தொடர்பாக மதத் தலைவர்களும் அரச அதிகாரிகளும் ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுத்தல் அவசியம் ஆகும்” என்றுள்ளது.

 

 

Tamilwin