24ம் திகதி முதல் 200 ரூபாவால் அதிகரிக்கும் எரிபொருள் விலை: மோசடியின் பின்புலத்தில் ராஜபக்சவின் மகன்

எரிபொருளின் விலையை எதிர்வரும் 24 ஆம் திகதி 200 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மோசடியில் ராஜபக்சவின் மகன்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு நெருக்கடியில் இருக்கும் வேளையில் தற்போது அமைச்சராக இருக்கும் ராஜபக்சவின் மகன் ஒருவரும் எரிபொருள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதன் காரணமாகவே எரிபொருள் விலை சடுதியாக அதிகரிக்க காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை முதல் முடங்கும் நாடு

மேலும், நாட்டில் தொடரும் நெருக்கடி காரணமாக ஜூலை முதல் வாரத்திற்குள் நாட்டை முழுமையாக மூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் இந்தியாவின் தலையீடு தீவிரமாகியுள்ளமையினால் மன்னாரில் உள்ள நான்கு எண்ணெய்க் கிணறுகளையும் இந்தியாவிற்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

IBC Tamil