தென்கொரியா ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது

நூரி ராக்கெட் பூமியில் இருந்து 700 கி.மீ. தொலைவில் செயற்கைகோளை துல்லியமாக செலுத்தியது. செயற்கை கோள் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது

தென்கொரியா, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராக்கெட்டை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வி அடைந்தது.

ராக்கெட்டின் எந்திரம் திட்டமிட்டதைவிட முன்பே எரிந்ததால் சுற்று வட்ட பாதையில் நுழைய முடியவில்லை. இந்த நிலையில் நேற்று ‘நூரி’ ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதில் பொருத்தப்பட்ட செயற்கை கோள் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மூன்று நிலைகளில் இயங்க கூடிய நூரி ராக்கெட் பூமியில் இருந்து 700 கி.மீ. தொலைவில் செயற்கைகோளை துல்லியமாக செலுத்தியது.

இதன் மூலம் செயற்கை கோளை புவியின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்துவதற்கான தொழில்நுட்பமும், பெரிய வகை ராக்கெட்டுகளை தயாரிக்கும் திறன் தங்களி டம் இருப்பதாக தென்கொரிய தெரிவித்துள்ளது.

மேலும் வரும் ஆண்டுகளில் நான்கு நூரி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தவும், அடுத்த தலைமுறை ஏவுகணையை உருவாக்கவும் தென்கொரியா திட்டமிட்டுள்ளது. சொந்த தொழில் நுட்பத்தில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் 10-வது நாடு தென்கொரியா ஆகும்.

 

Malaimalar