நெருக்கடிக்கு கடந்த கால அரசாங்கங்களே காரணம் – விஜயதாஸ ராஜபக்ச

கடந்த காலங்களில் இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்களே நாட்டின் மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு காரணம் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ எமது நாட்டின் அரசாங்கத்தின் ஆட்சியில் கடந்த 07, 08 தசாப்தங்களாக செய்ய வேண்டிய கடமையை அரசாங்கங்கள் செய்யாத காரணத்தால் எங்களுக்கு பாரிய பிரச்சனைக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இது எமது துரதிஷ்ட நிலைமையாகும்.

மேலும் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு அனுமதியளிக்க முடியாது

நாங்கள் 30 ஆண்டுகளாக இனங்களாக பிரிக்கப்பட்டு, ஏனைவர்களுக்கு இடையில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி இந்த நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்தியவர்கள் அடிப்படைவாதமுடைய சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆட்சியாளர்களே. இவ்வாறானவர்களுக்கு மேலும் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு அனுமதியளிக்க முடியாது.

மக்களாக நாங்கள் ஒன்றுபட வேண்டும். இந்த நாட்டில் அனைவரும் ஒன்றுபட்டு இன,மொழி,மத பேதமின்றி தத்தமது கலாசாரத்தை ஒவ்வொருவரும் பாதுகாத்து மதித்து ஒற்றுமையான நாட்டை எமது எதிர்கால சந்ததிற்கு வழங்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கும் எனக்கும் உள்ளது” – என்றார்.

 

 

 

IBC Tamil