2035ஆம் ஆண்டுவரை பதவியில் இருப்பேன்! – பிரிட்டிஷ் பிரதமர்

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson), 2035ஆம் ஆண்டுவரை பதவியில் இருக்க இலக்கு கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

புதிய தலைமைத்துவச் சவாலைத் தாம் எதிர்பார்க்கவில்லை என்று அவர் சொன்னார்.

திரு. ஜான்சன் பதவி விலக வேண்டும் என்று பலர் இதற்கு முன்னதாகக் கோரியிருந்தனர்.

அதன் தொடர்பில், இந்த மாதத் தொடக்கத்தில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் நடத்தப்பட்டது.

நாடாளுமன்றத்தை வேண்டுமென்றே திசைதிருப்பியதற்காகத் திரு. ஜான்சன் மீது விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில், அவரது பழமைவாதக் கட்சி தோல்வியைச் சந்தித்திருந்தது.

வாக்காளர்களிடையே பழமைவாதக் கட்சியினரின் பிரபலம் குறைவதாகக் கூறப்படுகிறது.

 

 

 

Seithimediacorp