ஃபின்லந்தும் சுவீடனும் நேட்டோவில் இணையத் துருக்கி தடையாக இருக்காது

ஃபின்லந்தும் சுவீடனும் நேட்டோ கூட்டணியில் இணைவதை ரத்து அதிகாரத்தால் தடுக்கப் போவதில்லை என்று துருக்கி தெரிவித்துள்ளது.

4 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின், 3 நாடுகளும் ஒன்று மற்றதன் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒப்புக்கொண்டன

அதை அடுத்து, ஃபின்லந்தும் சுவீடனும் நேட்டோவில் சேருவதற்கான தங்கள் விண்ணப்பத்தைத் தொடரலாம்.

அவை நேட்டோவில் இணைவதற்குத் துருக்கியின் ஆதரவை உறுதிப்படுத்தும் இணக்கக் குறிப்பில் 3 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இரு நாளில் முடிவெடுக்கப்படும் என்று ஃபின்லந்து அதிபர் கூறினார்.

நேட்டோக் கூட்டணி ரஷ்யாவைப் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதுகிறது.

உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்புக்குப் பிறகு ஃபின்லந்தும் சுவீடனும் நேட்டோவில் சேருவதற்கான தங்கள் விருப்பத்தை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தன.

 

 

seithimediacorp