உக்ரேனின் துறைமுக நகரைத் தாக்கிய ரஷ்யா

ரஷ்யா கருங்கடல் ஓரத்தில் இருக்கும் உக்ரேனின்  ஒடேசா (Odesa) துறைமுக நகரைத் தாக்கியுள்ளது. அதில் 20க்கும் அதிகமானோர் மாண்டனர், மேலும் பலர் காயமுற்றனர்.

ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் குடியிருப்புக் கட்டடமும் உடற்பயிற்சி  நிலையமும் சேதமடைந்ததாக அதிகாரிகள் கூறினர். கருங்கடல் ஓரம் இருக்கும் ஒடேசா துறைமுகத்தையும் மற்ற துறைமுகங்களையும் தடுக்க அருகாமையில் உள்ள Snake Island தீவில் ரஷ்யா ராணுவ நிலையை வைத்திருந்தது. அங்கிருந்து ரஷ்யப் படையினர் வெளியேறிய சில மணிநேரத்தில் ஒடேசா துறைமுகம் தாக்கப்பட்டது.

உக்ரேனின் உள்புறங்களில் உள்ள பகுதிகளை நீண்ட ஏவுகணை கொண்டு தாக்குவதை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

 

Seithimediacorp