நாளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளோர் எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளோர் எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை.பயமின்றி போராட்டத்தில் கலந்துக்கொள்ளலாம்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வோர் ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேர்ந்தால் எமது சட்டத்தரணிகள் குழாம் அவர்களுக்காக முன்னிற்பார்கள் என்றும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
முப்படையினரிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
மேலும்,முப்படையினரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இலங்கையில் வசிப்பதால், துன்பப்படும் அனைத்து மக்களுக்காகவும் இந்த போராட்டம் நடத்தப்படுவதாகவும், எனவே ஊழல் அரசியல்வாதிகளை பாதுகாக்க வேண்டாம் என்றும் முப்படையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“எந்த நேரத்திலும் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியை நீட்டாதீர்கள். கடந்த மாதம் 9ஆம் திகதி நடந்த வன்முறைகள் மீண்டும் நடைபெறுவதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் உயரடுக்கினரால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், முப்படையினர் அவர்களுக்கு எதிராக நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அவர்களுடன் சேர்ந்து மக்களை தாக்குவதற்கு அல்ல என்றும்,இலங்கையின் எதிர்கால சந்ததியினரை பற்றி சிந்திக்குமாறும் முப்படையினருக்கு பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
tw