பிரான்ஸின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட ‘பெரும் தீயைக்’ கையாளச் சுமார் 1,000 தீயணைப்பாளர்கள் போராடியதாகக் கூறப்பட்டது.
கார்ட் (Gard) வட்டாரத்தில் 600 ஹெக்டர் பரப்பளவிலான வட்டாரம் தீப்பற்றிக்கொண்டது.
தீயணைப்பாளர்கள் விமானம்வழி அங்கு அனுப்பப்பட்டனர்.தீயை முழுமையாக அணைக்க சில நாள்கள் எடுக்கலாம் என்று அதிகாரிகள் முன்னுரைத்துள்ளனர்.
குடியிருப்பு வட்டாரங்களுக்குத் தீ பரவுவதைத் தடுக்க அதிகாரிகள் சில வனப்பகுதிகளுக்கு முன்கூட்டியே தீமூட்ட நேரிட்டது.அவ்வாறு செய்வதன்வழி தீயின் சீற்றம் மெதுவடையும் என்றும் அதை மேலும் சுலபமாகக் கட்டுப்படுத்தமுடியும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
சுமார் 100 பேருக்குத் தற்காலிக வசிப்பிடம் ஏற்பாடுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
smc