போப் ஆண்டவர் பிரான்சிஸ் இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார். இந்த சிக்கலில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு அங்குள்ள அரசியல் தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அங்கு நிலவும் அரசியல் மற்றும் சமூக குழப்பங்கள் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார். இந்த சிக்கலில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு அங்குள்ள அரசியல் தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறி இருப்பதாவது:- அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மையால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் இலங்கை மக்களின் துயரில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன். ஏழைகளின் அழுகுரலை புறக்கணிக்க வேண்டாம் என்று இலங்கை பிஷப்புகளுடன் இணைந்து ஆட்சியாளர்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
mm