எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் சைக்கிள் தேவை அதிகரிப்பு

பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. இலங்கையில் ஒரு சாதாரண சைக்கிள் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் அத்தியாசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் திணறுகிறார்கள். பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. 1 லிட்டர் பெட்ரோல் ரூ.450-க்கு மேல் விற்கப்படுகிறது.

அதுவும் நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்து கிடந்தாலும் பெட்ரோல் கிடைப்பதில்லை. எனவே இலங்கையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பயன்படுத்துபவர்கள் ஏராளமானோர் சைக்கிள் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதனால் சைக்கிள் கடைகளில் விற்பனை சூடு பிடித்துள்ள சைக்கிள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால் சைக்கிள்களின் விலை எகிறியது. இலங்கையில் ஒரு சாதாரண சைக்கிள் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. பலர் அதடினயும் போட்டிபோட்டு வாங்கி செல்கிறார்கள். தற்போது சைக்கிளில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் சைக்கிள் தேவை அதிகரித்துள்ளது.

நடுத்தர மக்களால் ரூ.50 ஆயிரம் விலை கொடுத்து சைக்கிள் வாங்க முடியாது என்பதால் அவர்கள் தங்களது வீடுகளில் கிடக்கும் பழைய சைக்கிள்களை தூசி தட்டி எடுத்து பழுது பார்த்து பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.

 

mm