இலங்கைக்கு பயணிக்க வேண்டாம்! பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ள நாடுகள்

அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் அத்தியாவசிய காரணங்களுக்காக இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என தமது பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளன.

இந்த புதுப்பிப்புகளில், நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி, பொதுமக்கள் எதிர்ப்பு மற்றும் வன்முறைகளால் பொது இடையூறுகள் ஏற்படக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பயண ஆலோசனைகளை புதுப்பிக்கும் போது சில நாடுகளுக்கு விதிக்கப்படும் ஊரடங்குச் சட்டம் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

பயண ஆலோசனையில் உள்ளடங்கிய விடயம்

மேலும், நாட்டில் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதால் சுற்றுலா பயணிகள் இடையூறின்றி தமது பயணங்களை மேற்கொள்ள முடியாது எனவும் பயண ஆலோசனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கான பயண ஆலோசனையை மே 16 ஆம் திகதி செம்மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்திய அமெரிக்கா, தொடர்ந்து அதே ஆலோசனை மட்டத்தினை காண்பித்துள்ளது.

இதன்படி, அத்தியாவசிய காரணங்களை தவிர இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் எனவும் அமெரிக்கா தனது பிரஜைகளுக்கு மேலும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், சிங்கப்பூர் தங்களது பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளதுடன், நாட்டில் எழுந்துள்ள போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் காரணமாக இலங்கைக்கு செல்வத்தை தவிர்க்குமாறும் கூறியுள்ளது.

இதேவேளை,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூருக்கு சென்றுள்ள நிலையில் இந்த பயண ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

-tw