உலக சந்தையில் வீழ்ச்சியடையும் எரிபொருள் விலை! இலங்கையிலும் குறைக்கப்படலாம்

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டுமென தொழிற்சங்கங்களின் ஐக்கிய ஒன்றியத்தின் அமைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார்.

உலக சந்தையில் எரிபொருளின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருளின் விலை அதிகளவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் முன்வைத்துள்ள விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலைகள் கணிசமாகக் குறைக்கப்பட வேண்டுமெனவும் இதனால் எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு எவ்வித நட்டமும் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.

உலக சந்தையில் ஒரு பீப்பாய் 104 டொலர்கள்

உலக சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை நாளொன்றுக்கு முன்னர் நூற்று நாற்பத்தைந்து டொலர்களாக இருந்த நிலையில் இன்று அதன் விலை 104 டொலர்களாக குறைந்துள்ளதாகவும் இதன் பயனை மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து வரிகளையும் வசூலித்ததன் பின்னர், 92 ஒக்டேன் பெட்ரோலின் விலையை தற்போதுள்ள விலையில் இருந்து 110 ரூபாவால் குறைக்க முடியும் எனவும்,

95 லீற்றர் பெட்ரோல் 120 ரூபா அல்லது அதற்கும் குறைவாக வழங்கப்படலாம் எனவும் குறிப்பிட்டார்

ஒரு லிட்டர் சுப்பர் டீசல் 120 ரூபாவினாலும் குறைக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

-ibc