இலங்கையில் கோத்தபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) பதவிவிலகவேண்டும் என்று கோரி நடத்தப்படும் போராட்டம் 100வது நாளை எட்டியுள்ளது.
போராட்டக்காரர்கள் அதை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றனர். பொருளாதார நெருக்கடியைத் தவறாகக் கையாண்டதற்காகப் பதவி விலகிய அதிபர் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினரின் வீழ்ச்சியை போராட்டக்காரர்கள் கொண்டாடினர்.
போராட்டத்தில் இறந்தவர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றி நன்றி தெரிவிக்கப்பட்டது. ராஜபக்ச குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்று கருதப்படும் தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) மீது போராட்டக்காரர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் விக்ரமசிங்கவை முன்னிறுத்த வேண்டாம் என்று அரசியல் கட்சிகளிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.வேட்பாளராக யாரைத் தெரிவு செய்வது என்பது குறித்து ஒருமித்த கருத்தைப் பெற அரசியல் கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
-smc