சென்ற வாரம் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடந்த சதுரங்க ஆட்டத்தின்போது ஓர் இயந்திரம் 7 வயதுச் சிறுவனின் கைவிரலை முறித்துவிட்டதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
அந்த இயந்திரமும் சிறுவனும் சதுரங்க ஆட்டம் விளையாடிக்கொண்டிருந்தனர்.
இயந்திரத்தின் முறை முடிந்த பின், அந்தச் சிறுவன் தனது காயை நகர்த்தினான்.அப்போது இயந்திரம் சிறுவனின் கைவிரலைப் பிடித்துக்கொண்டது சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளியில் தெரிந்ததாக BBC செய்தி நிறுவனம் கூறியது.
அந்தச் சிறுவனுக்கு உதவ உடனே 4 பெரியவர்கள் விரைந்தனர்.ஒருவழியாக அந்தச் சிறுவன் இயந்திரத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதாக BBC சொன்னது.
அந்த இயந்திரம் இதற்கு முன் பல ஆட்டங்களில் கலந்துகொண்டுள்ளதாகவும் இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்ததில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சிறுவன் சதுரங்கப் போட்டியை விரல் கட்டுடன் முடித்ததாக ரஷ்ய ஊடகம் கூறியது.
-mm