கோட்டாபயவுக்கு விசா வழங்க மறுத்த நாடுகள்! போராட்டத்தின் மூளையாக சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியில் இருந்து விலக வைக்கும் போராட்டத்தின் பின்னணியில் மூளையாக செயற்பட்டவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க என விமானப்படையின் முன்னாள் அதிகாரியான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு சிங்கள பௌத்த மக்கள் மீது கோபம் இருப்பதாகவும் காலிமுகத்திடல் போாராட்டம் என்பது போராட்டம் அல்ல அது பயங்கரவாதம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கீர்த்தி ரத்நாயக்க இதனை கூறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இந்தியா

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இந்தியா. கோட்டாபய ராஜபக்ச வெறும் பகடைக்காய் மாத்திரமே. போராட்டம் நடத்திய இலங்கையில் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பான தகவல் எனக்கு கிடைத்தது.

இதனை நான் கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட ஊழியர்கள் குழுவில் இருக்கும் ஷர்மிளா ராஜபக்சவுக்கு 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி என்னை கைது செய்வதற்கு முன்னர் இந்த தகவலை நான் அவருக்கு வழங்கினேன்.

கோட்டாபய ராஜபக்ச இன்னும் ஒரு வருடத்தில் வீட்டுக்கு செல்வார் என நான் தெளிவாக கூறியிருந்தேன். கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பும் திட்டம் வகுக்கப்பட்டு விட்டது. அவருக்கு வீட்டுக்கு செல்ல நேரிடும் என்று ஷர்மிளா ராஜபக்சவிடம் கூறினேன்.

நாட்டில் நடக்க போகும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் உட்பட அனைத்து விடயங்கள் பற்றியும் எனக்கு தகவல் கிடைத்திருந்தது. இந்தியாவிடம் இருந்து எனக்கு இந்த தகவல்கள் கிடைக்கின்றன.

றோ மற்றும் தமிழகத்தில் உள்ள புலனாய்வுப் பிரிவுகள் இலங்கையில் நடக்கும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை தமிழக புலனாய்வுப் பிரிவினரே கண்டறிந்தனர்.

அந்த புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புடைய நபர்களிடம் இருந்தே எனக்கு தகவல்கள் கிடைத்தன. இவை நான் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் கூறிய விடயங்கள். இந்தியாவின் குடியரசு தினத்தில் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது.

தாக்குதலை திட்டமிட்டவர் விப்லால் மௌலவி. என்னை கைது செய்த பின்னர், அவர் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றார். சென்னை எக்மோரில் உள்ள மஹாபோதி விகாரை மீது தாக்குதல் நடத்த விப்லால் மௌலவி, தமிழக புலனாய்வுப் பிரிவை சேர்ந்த ஒருவருக்கு இரண்டு மில்லியன் ரூபா வழங்கியுள்ளார்.

கோட்டாபயவுக்கு மறுக்கப்பட்ட விசா

கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்தியா, அமெரிக்கா, அயர்லாந்து பல்கேரியா போன்ற நாடுகள் விசா வழங்க மறுத்தமை உண்மையானது.

காலிமுகத்திடலில் நடப்பது போராட்டம் அல்ல காலிமுகத்திடல் பயங்கரவாதம். பொருளாதார நெருக்கடிக்கு தொடர் போராட்டங்கள் மூலம் தீர்வை பெற முடியாது.

போராட்டத்தின் பின்னணியில் சந்திரிக்கா

இலங்கையில் அடிப்படைவாத காவிகள் குழு இருந்தது. ஞானசார, அத்துரலியே ரதன, இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ, மாகல்கந்த போன்ற தேரர் அடிப்படைவாத காவிதாரிகள். இவர்கள் இனவாதத்தை தூண்டி விடும் நபர்கள். இவர்கள் போன்றவர்கள் பற்றி புத்த பகவானும் கூறியுள்ளார்.

காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இருக்கின்றனர். அவரே அமெரிக்க நிறுவனம் ஒன்றின் பிராந்திய பிரதானி. போராட்டத்திற்கு நிதியுதவிகளை வழங்கினார்.

ரெட்டா போன்றவர்கள் எடுபிடிகள். சந்திரிக்காவுக்கு பௌத்த சிங்கள மக்கள் மீது பெரிய கோபம் இருக்கின்றது. அவரது தந்தையை சுட்டுக்கொன்ற புத்தரக்கித்த தேரர் மீது அவருக்கு கோபம் இருக்கலாம்.

மகிந்த ராஜபக்சவின் 52 நாள் அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் போதும் சந்திரிக்கா, அரசியல் சூழ்ச்சி ஒன்றை செய்ய முயற்சித்தார். மகேஷ் சேனாநாயக்கவுடன் இணைந்து ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தார்.

காலிமுகத்திடல் போராட்டத்தில் பின்னணியில் இருக்கும் சந்திரிக்காவின் முக்கிய நோக்கம் கோட்டாபயவை ஆட்சியில் இருந்து அகற்றுவது.

தற்போது போன்றே அப்போதும் நாட்டில் அராஜக நிலைமை காணப்பட்டது. அப்போது இரண்டு பிரதமர்கள், ரணிலும் தன்னை பிரதமர் என்றார், மகிந்தவும் தன்னை பிரதமர் என்றார். அப்போதும் சந்திரிக்கா அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் 60 வீத வாக்குகளை பெற முடியாமல் இருந்தது.

இதனால், முஸ்லிம் இனவாதத்தை தூண்ட போலி ஐ.எஸ். தாக்குதல் நடத்தப்பட உள்ளது என்று நான் முன்கூட்டியே தெரிவித்திருந்தேன். ஈஸ்டர் தாக்குதலில் கோட்டாபய ஒரு பகடைக்காய் மாத்திரமே.

இந்தியாவே பிராந்தியத்தை கட்டுப்படுத்தி வருகிறது-  இந்து நாட்டுக்காக ஜிகாத்தை பயன்படுத்கிறது

இந்த பிராந்தியத்தின் பெரிய அண்ணன் இந்தியா, இந்தியாவே இந்த பிராந்தியத்தை கட்டுப்படுத்தி வருகிறது. பிராந்தியத்தின் பெரிய அண்ணனே ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி.

இந்தியாவில் தற்போது என்ன நடக்கின்றது. அது ஒரு இந்து நாடு, அந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமாயின் ஜிகாத் பூச்சாண்டியை அப்படியே முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருக்கின்றது.

சுதந்திரத்திற்கு முன்பு போல் இந்தியாவுடன் பாகிஸ்தானும் பங்களாதேஷூம் இணைந்தே இருந்திருந்தால், இந்தியாவில் பெரும்பான்மை மக்களாக இந்துக்கள் இருந்திருக்க மாட்டார்கள். முஸ்லிம்களே பெரும்பான்மை மக்களாக இருந்திருப்பார்கள்.

இதனால், இந்தியா இந்து நாடு என்பதை காப்பாற்றிக்கொள்ள முஸ்லிம் ஜிகாத் பிரச்சினையை முதன்மையாக கொண்டு அரசியல் காய்நகர்த்தல்களை நகர்த்தி வருகிறது.

அதேவேளை கோட்டாபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு சென்றாரா அல்லது நாட்டிற்குள் எங்கேனும் மறைந்து இருக்கின்றாரா, மிரிஹானவில் உள்ள அவரது வீட்டுக்குள் இருக்கின்றாரா என்பதை புலனாய்வு செய்து வருகின்றேன்.

எனினும் இன்னும் சிறிது காலத்தில் கோட்டாபய ராஜபக்ச திரும்பி வருவார் அல்லது அவர் மறைந்திருக்கும் இடத்தில் இருந்து வெளியில் வருவார் எனவும் கீர்த்தி ரத்நாயக்க இதனை கூறியுள்ளார்.

கீர்த்தி ரத்நாயக்க என்ற இந்த முன்னாள் விமானப்படை அதிகாரி, ஈஸ்டர் தாக்குதல் நடைபெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் அப்படியான தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்றில் தகவல் வெளியிட்டிருந்தார்.

அத்துடன் காலிமுகத் திடல் போராட்டம் போன்ற போராட்டம் நாட்டில் நடக்க போகிறது என்று தகவல் வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

-tw