கண்மூடித்தனமான சுற்றறிக்கைகள் மூலம் தண்டனை நடைமுறைப்படுத்துவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்துடன், மக்கள் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நெருக்கடியில் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (28) எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினருடன் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள் மற்றும் மோசடி செய்பவர்களுக்கு இல்லாத தண்டனை நாட்டின் பொருளாதார இயந்திரத்தை கையாளும் நபர்களை இலக்காகக் கொண்டது என்று குறிப்பிட்டார்.
“சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் ஆதரவற்ற நிலையில் இருக்கும்போது, நாடா ளுமன்ற அமைச்சர்கள் அரசியல் விளையாட்டுகளை விளையாடுகிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.
-ibc