ரணிலுக்கு வலுக்கும் ஆதரவு – ஐ.தே.க வில் இணைய உள்ள அமைச்சர்கள்

தற்போதைய ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பலர் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தில் இருந்து விலகி சுதந்திரமாக செயற்படவுள்ள சிலரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையத் தயாராக உள்ளனர்.

தேர்தலில் பலர் போட்டி

இந்த குழுவில் பல கபினட் அமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர். அதன்படி எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பலர் போட்டியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

-ibc