இலங்கையின் ஆடை ஏற்றுமதிகளில் வீழ்ச்சி

உள்நாட்டில் நிலவும் உறுதியற்ற தன்மை மற்றும் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற அதன் வாங்கும் சந்தைகளில் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் விளைவாக இலங்கையின் ஆடைகளுக்கான கொள்வனவு கட்டளைகள், 10-15 சதவீத வீழ்ச்சியை எதிர்கொள்கின்றன.

கூட்டு ஆடை சங்க மன்றத்தின் பேச்சாளர் யோகன் லோரன்ஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது முக்கியமாக ஐரோப்பாவில் பணவீக்கம் போன்ற வெளிப்புறக் காரணிகளால் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆடைத்தொழில்துறையினர் எதிர்கொள்ளும் சிக்கல்

ஐரோப்பிய வாடிக்கையாளர்கள் மத்தியில் வாங்கும் திறன் குறைந்து வருகின்றது. பங்களாதேஷ் போன்ற பிற நாடுகளிலும் குறைந்தனவான கொள்வனவு கட்டளைகளே கிடைக்கின்றன.

அதேநேரம் இலங்கையில் ஆடைத்தொழில்துறையினர் எதிர்கொள்ளும் தற்போதைய சிக்கல்களின் விளைவால் கொள்வனவு கட்டளைகளை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை சந்தையில் விலைவாசி உயர்வினால் முகங்கொடுக்கும் ஊழியர்களின் சுமையை குறைக்கும் வகையில் பொருளாதார செயலணியொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக கூட்டு ஆடை சங்க லோரன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

-tw