இலங்கையில் எரிபொருள் இறக்குமதி ஓராண்டுக்குக் கட்டுப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு எரிபொருள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது.
அங்கு வசிப்போர் தினந்தோறும் பல மணிநேரம் மின்வெட்டை எதிர்நோக்குவதாகக் கூறப்படுகிறது.
உணவு, மருந்து ஆகியவற்றுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது.எரிபொருள் வாங்குவோர் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் இலங்கை முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
தேசிய எரிபொருள் பயன்பாட்டு அமைப்பின்கீழ் மக்களுக்கு QR குறியீடு வழங்கப்பட்டது.ஆகவே எரிபொருளைப் பெற்ற சிலர் அதை மீண்டும் விற்க முயற்சி மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவே போதுமான எரிபொருள் இல்லை என்று இலங்கை நிவாரணக் குழுக்கள் கூறுகின்றன.பிள்ளைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு விரைவாகப் பரவுவதால் அதன் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவசரநிலை மனுவை விடுத்துள்ளது.
அங்கு தொடரும் நெருக்கடியால் சுமார் 90 விழுக்காட்டினர் அரசாங்கம் வழங்கும் அத்தியாவசியப் பொருள்களை நம்பியிருக்கின்றனர்.
-smc