ஒரே சீனா என்ற கொள்கைக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் – ரணில்

ஒரே சீனா என்ற கொள்கைக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் க்யூ ஸெஹெனொங், இன்று ஜனாதிபதியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ஒரே சீனா கொள்கையை ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நாடுகளின் இறையாண்மை மற்றும் பெளதீக ஒருமைப்பாடு போன்ற ஐக்கிய நாடுகளின் பிரகடனங்களை இலங்கை திடமாக மதிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா,இந்தியாவின் புகழ்

பஸ்பர மரியாதை மற்றும் உள்விவகாரங்களில் தலையீடாமை என்பன அனைத்து நாடுகளினாலும் பின்பற்ற வேண்டிய கொள்கையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக சீனாவையும் இந்தியாவையும் ஜனாதிபதி ரணில் புகழ்ந்து பாராட்டி வருவதனை அவதானிக்க முடிகின்றது.

 

 

-tw