சீனாவின் ராணுவ நடவடிக்கை சீண்டிப் பார்க்கும் பொறுப்பற்ற செயல்: அமெரிக்கா

தைவான் விவகாரத்தில் சீனா நடந்து கொள்ளும் விதத்தை அமெரிக்கா கடிந்திருக்கிறது. தைவானைத் தாக்குவதற்கான ஒத்திகை போன்ற பயிற்சியில் சீனா ஈடுபட்டிருப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

தைவானைச் சுற்றி நடக்கும் ராணுவ நடவடிக்கை இப்போது இருக்கும் நிலைப்பாட்டை மாற்றுவதற்கு சீனா எடுக்கும் மிகப்பெரிய முயற்சி போல் தோன்றுவதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டது.

சீனாவின் ராணுவ நடவடிக்கை, சீண்டிப் பார்க்கும், பொறுப்பற்ற செயல் என்றும், தவறான கணிப்பின் அபாயத்தை அதிகரிக்கக்கூடியது என்றும் அமெரிக்கா கூறியது.

நேற்று (ஆகஸ்ட் 6)  தைவான் அதன் போர்விமானங்களை ஆயத்தநிலையில் வைத்தது.

20 சீன விமானங்களை எச்சரித்து விரட்டுவதற்காக அவ்வாறு செய்தது. அவற்றில் 14 சீன விமானங்கள் தைவான் நீரிணையில் எல்லையைக் கடந்து சென்றன.

 

 

-smc