மேட்டுக்குடி அரசியல்வாதிகளின் சூழ்ச்சி மற்றும் சதிகளால் பாட்டாளி வர்க்க மக்களின் போராட்டம் தோல்வியுற்றதாக டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
பொதுஜன பெரமுண கட்சியின் மறுசீரமைப்புக் குழுவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் காலிமுகத்திடல் போராட்டம் பாட்டாளி வர்க்க இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டது.
சூழ்ச்சிகளால் தோற்கடிக்கப்பட்ட போராட்டம்
ஆனால் ரணில் விக்ரமசிங்க மற்றும் பசில் ராஜபக்ச போன்ற மேட்டுக்குடி அரசியல்வாதிகளால் அந்தப் போராட்டம் சதி மற்றும் சூழ்ச்சிகளால் தோற்கடிக்கப்பட்டது.
பிரதமர் பதவியில் இருந்த மஹிந்த விலகியவுடன் பசிலும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து இருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக கோட்டாபய தொடர்ந்தும் இருந்திருப்பார்.
சர்வ கட்சி அரசாங்கமொன்றையும் அமைத்திருக்க முடியும். அப்படிச் செய்திருந்தால் ரணில் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வந்திருக்க முடியாது போயிருக்கும் மே 09 மஹிந்தவும், ஜூன் 09 பசிலும், ஜூலை 09 கோட்டாபயவும் வீடு செல்லக் காரணமாக இருந்த போராட்டம் கடைசியில் காட்டிக் கொடுப்புகளால் ஆகஸ்ட் 09 முடிவுக்கு வந்துவிட்டது. அதுகுறித்து மிகப் பெரும் மனவருத்தம் உள்ளது என்றும் டிலான் பெரேரா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
-tw