அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு! விசாரணைக்கு அழைக்க தீர்மானம்

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஊழல் எதிர்ப்பு முன்னணியினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானிய நிறுவனம் ஒன்றிடம் இலஞ்ச பணம் கோரப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

இதன்படி, இந்த வாரம் முதற்கட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதுடன், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளார்.

கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் மற்றும் ஜப்பான் தாய்ஸ் நிறுவனத்திடமும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

-tw