தடைப்பட்டியலில் புலம்பெயர் அமைப்புகள் – சுமந்திரன் விடுத்துள்ள கோரிக்கை

தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ள ஏனைய புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் அடங்கிய குழுவை தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கியதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் ஆதாரங்கள்

தடை செய்யப்பட்ட பட்டியலில் தொடர்ந்தும் இருக்கும் ஏனைய அமைப்புக்களுக்கும் கூட பயங்கரவாதத்திற்கான ஆதரவளிக்கும் எந்தவித ஆதாரங்களும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறான தொடர்புகள் இருப்பின் அதனைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

-ibc