இலங்கையின் பிரஜைகள் தொடர்பான தனிநபர் கடன் தொகை தொடர்பான அறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
இந்த வகையில் தனிநபர் கடன் தொகையானது தற்போது ஒரு மில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கின்றது.
தற்பொழுது இலங்கையின் உள்நாட்டுக் கடனாக சுமார் 12,442.3 பில்லியன்களும், வெளிநாட்டுக்கடனாக 10.867.8 பில்லியன்களும் செலுத்த வேண்டியிருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அரசு செலுத்த வேண்டிய மொத்த கடன்
மேலும், இந்த வருடம் ஏப்ரல் மாதம் அரசு செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகையானது 4 மாதங்களுக்குள் 32 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வகையில் தனி நபரின் கடனானது தற்போது 10 லட்சமாக அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.
-ibc

























