தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது, ஒரு சில புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்க நடவடிக்கையெடுத்துள்ளமையானது ஐ.நாவில் எதிர்வரும் மாதம் கொண்டுவரவுள்ள பிரேரணையில் தங்களை நியாயப்படுத்துவதற்காக முன்னெடுக்கும் நாடகம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று(24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டை கட்டியெழுப்ப போகின்றோம் என்று பொய்களை கூறி கடன்களை பெறும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்காக காணிகளை அபகரித்துள்ளது.
வடக்க கிழக்கில் உள்ள விவசாயிகளும் கடற்றொழிலாளர்களும் மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ளனர்” எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
-tw