கடன் நிவாரணம் தொடர்பான நிலைப்பாடு குறித்து சீனாவிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை

கடன் நிவாரணம் தொடர்பான தனது நிலைப்பாட்டை வியத்தகு முறையில் மாற்றிக்கொள்ளுமாறு சீனாவை இலங்கை வலியுறுத்தியுள்ளது.

இதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிக்கேய் ஏசியாவிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் சீனாவுடன் ஒப்பந்தத்தை எட்டுவது எளிதான காரியம் அல்ல என்பதை அந்த நேர்காணலில் ரணில் விக்ரமசிங்க ஒப்புக்கொண்டார்.

வெளிநாட்டு இருப்பு பற்றாக்குறை காரணமாக துயரத்தில் மூழ்கியிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயலும், ரணில் விக்ரமசிங்கவுக்கு வலிமையான சவாலாகவே இந்த விடயம் கருதப்படுகின்றது.

சீன அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

கொழும்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று ஆரம்பமாகியுள்ள புதிய சுற்று கலந்துரையாடலில் இந்த முயற்சி குறித்து முக்கியமாக கலந்துரையாடப்படுவதை தவிர்க்க முடியாது.

எனவே மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை தாங்கள் சீன அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளதாக ரணில் விக்ரசிங்க குறிப்பிட்டுள்ளார். சீனா, நிச்சயமாக, ஒரு வித்தியாசமான அணுகுமுறையை இந்த விடயத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ரணில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பை பொறுத்தவரை, சீனாவின் காரணியே இலங்கையின் பொருளாதார அதிர்ஷ்டத்தை வடிவமைக்க உள்ளது என்பது குறித்துக்காட்ட வேண்டிய அம்சமாகும்.

முன்னதாக மகிந்த ராஜபக்சவின் காலத்தில் சீனாவுடன் இருந்த உறவு, தற்போது வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சீன கப்பல் விடயத்திலும் அந்த வீழ்ச்சி ஆழமாகிப்போனது. இதற்கு மத்தியிலேயே சீனாவின் வியத்தகு, முடிவு குறித்து ரணில் கருத்துரைத்துள்ளார்.

 

-tw